Sunday 25 May 2014

சண்டாள ஈழன்.

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
அதிலும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



3 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்

    ReplyDelete
  2. கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
    காலம் வரும் ..........

    எழுத்தில் தொடங்கி வலைப்பூவில் உங்களை தொடர்வதில் மகிழ்ச்சி அய்யா...

    ReplyDelete
  3. நன்றி!நான் இன்னும் இருபது தலைப்புகளில் பூக்களாக பூத்துள்ளேன் .
    நூல்களாகப் பதிப்பிக்கப்பட வரம் கிட்டவில்லை என்றபோதிலும் வலைச்சரத்தில் தொடுத்துக் கோர்க்கப்பட யோகம் பெற்றேன் என்பதில் மகிழ்ச்சியே.என்னுடைய அத்தனை பூக்களையும் தங்கள் சரத்தில் தொடுத்துக் கோர்த்துக் கொள்ளுங்கள்.

    அன்பன்
    கொ.பெ.பி.அய்யா.

    ReplyDelete